• Apr 01 2025

சன் டிவி சீரியல் நடிகையின் பிறந்தநாள் பார்ட்டி..! கிளாமர் காஸ்ட்யூமில் போட்டோ ஷூட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிக்கு ’திருமணம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் தான் ப்ரீத்தி ஷர்மா.

மாடல் அழகியான இவர், ஆரம்பத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.

அதன்பின் ராதிகா தயாரித்த ’சித்தி 2’ சீரியல் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. அதன் பின் கலர்ஸ் தமிழ், ஜீ டிவி உள்பட ஒரு சில சீரியல்களிலும்  நடித்துள்ளார்.


தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’மலர்’ என்ற சீரியலில் நாயகியாக நடித்து வரும் நிலையில், அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களையும் வைத்துள்ளார் ப்ரீத்தி ஷர்மா.

இந்நிலையில் ’மலர்’ சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களுடன் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு சென்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி உள்ளது.



 

Advertisement

Advertisement