• May 14 2026

சின்னத்திரையில் முதலிடம் பிடித்த சன் டிவி! போட்டிக்கு வந்த சிறகடிக்க ஆசை! திடீரென கடைசிக்கு சரிந்த பாக்கியலட்சுமி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இடையே ஒரு பெரும் போட்டியே நிலவி வருகிறது. அந்த வகையில், TRPயில் ரேட்டிங்கில் யார் முதல் இடத்தைப் பிடிப்பது என்பதுதான் அந்தப் போட்டி. 

இந்த நிலையில், இந்த வருடத்தின் 44வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. 

இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. அதுவும் 5 மணியில் இருந்து 11:00 மணிவரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் இடையே வரும் விளம்பரங்களை கூட மிஸ் பண்ணாமல் பார்க்கும் நிலையில் தான்  இல்லத்தரசிகள் உள்ளனர்.

அதன்படி, முதல் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் எவை என பார்ப்போம்.


கடந்த வாரம் இரண்டாம் இடத்தைப் பிடித்த கயல் இம்முறை முதலாம் இடத்திற்கு வந்துள்ளது. அதன்படி இரண்டாம் இடத்தில் வானத்தைப்போல சீரியல் பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தில் சிங்க பெண்ணே சீரியல் காணப்படுகிறது.

இதற்கு அடுத்த அடுத்த இடங்களில் எதிர்நீச்சல், சுந்தரி, இனியா, சிறகடிக்க ஆசை, ஆனந்த ராகம் போன்ற ஆகிய சீரியல்கள் உள்ளன.


இதை தொடந்து கடந்த வாரம் 9ம் இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் இம்முறையும் அதே இடத்தில் உள்ளது. இறுதி இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த வாரம் 8ம் இடத்தில் காணப்பட்ட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இம்முறை  7-வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement