• Jan 18 2025

ஜெனி வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்யும் செழியன்! ஜெனியின் அம்மாவுடன் கோவமாக கத்திப்பேசிய ஈஸ்வரி! அதிர்ச்சியில் பாக்கியா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் குறித்த சீரியலின் இன்றைய எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

அதன்படி இன்றைய எபிசோட்டில், எழில் ரூம்க்கு செல்கிறார் செழியன்.அங்க போன செழியன், உங்க கிட்டகொஞ்சம் பேசனும் டா, எனக்கும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு என்று சொல்ல, 'தப்பா.. நீ பெரிய அச்சீவ்மென்ட் பண்ணி இருக்கா என திட்டுகிறார் எழில். ஆனால் ஜெனிய பாக்கணும் டா..என் குழந்தைய பாக்கணும் ப்ளீஸ் என் கூட வாடா' என கெஞ்சுகிறார். இதற்கு' நீ ஜெனிக்கு பண்ணினது துரோகம்..உன்னால அம்மாவும் கஷ்டப்படுறாங்க..பிரச்சனை என்று வந்தா மட்டும் தான் அம்மா வேணும், அவங்கள பிரச்சனைல தான் மாட்டி விடுற..எனக்கு உன் கூட பேச பிடிக்கல' என சொல்லி அனுப்புகிறார் எழில்.


மறுபக்கம்,ஜெனி வீட்டிற்கு சென்று ஒரே ஒரு தடவ நான் உன்கூட பேசணும் ஜெனி என கதவை தட்டிக் கொண்டு இருக்கிறார் செழியன்.அந்த இடத்திற்கு ஜெனியை உள்ள போக சொல்லிவிட்டு ஜெனியின் அம்மா செழியனிடம் பேசுகிறார்.' என்ன பேசணும் ஜெனிட்ட, அவ உன்ன எவ்வளவு நம்பினா..அவள டிவோஸ் பண்ணிட்டு மாலினிய கல்யாணம் பண்ணுறன் என்று சொல்ல உனக்கு எப்படி மனசு' வந்த என்று திட்டிவிட்டு கதவை சாத்திவிட்டு செல்கிறார்.

இன்னொரு பக்கம், அத்தை மாமாவ சாப்பிட கூப்பிடுகிறார் பாக்கியா எனினும் அவங்க வேணாம் என்று சொல்ல அந்த நேரத்தில் ஜெனியின் அம்மா கோல் பண்ணி, 'உங்க பேரன் இங்கயும் என் பொண்ண நிம்மதியா இருக்க விடுறான் இல்ல.முதல்ல அவன இங்க இருந்து கிளம்ப சொல்லுங்க' என்று சொல்லி கதைக்கும் போது ஈஸ்வரி கொஞ்சம் கோபமாக கதைக்கிறார்.


இதையடுத்து கோபி செழியனுக்கு கால் பண்ணவும் அவர் எடுக்கவில்லை.இதை தொடர்ந்து செழியனை கூட்டி வாறன் என்று சொல்லி கோபி செல்கிறார்.மீண்டும் ஈஸ்வரி செழியன் பண்ணினது தப்பு இல்ல என்பது போல சொல்லிக் கொண்டு இருக்கும் போது ராதிகா வந்து பேசுகிறார்.எழிலும் 'எல்லாத்துக்கும் எங்க அம்மாவ திட்ட வேணாம். தப்பு பண்ணின செழியன கூப்பிட்டு அடிங்க' என்று சொல்லி பாக்கியாவை இழுத்துச் செல்கிறார்.

செழியனை காரில் அழைத்து வந்த கோபி, கொஞ்ச நாள் பொறு எல்லாம் சரியாகும் என சொல்ல, 'எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்.நான் இப்படி பண்ணி இருக்க கூடாது' என புலம்பி அழுகிறார்.அம்மாவ பத்தியும் சொல்லி அழுகிறார்.

ஜெனிக்கு போன் பண்ணுகிறார் பாக்கியா. எனினும் அவர் எடுக்க மறுக்க ஜெனியின் அம்மாவுக்கு கோல் எடுக்கிறார் பாக்கியா.அவங்களிடம் ஜெனிக்கு கோல் பண்ணினா அவ எடுக்கல என்று சொல்ல அவ எப்படி எடுப்ப என சொல்லி கதைக்கிறார் ஜெனியின் அம்மா.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.




Advertisement

Advertisement