• Jul 22 2026

அட்ரா சக்க...!! கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றி.. சூரிக்கு காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த தயாரிப்பாளர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருப்பவர் தான் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து படிப்படியாக தனது கடின உழைப்பினால் தற்போது தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தை தொடர்ந்து சூரி நடித்த கருடன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகிய விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பது.

இந்த படத்தில் நடிகர் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி. ஸ்வேதா நாயர், ரோஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


இந்த நிலையில், கருடன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் விலை உயர்ந்த பரிசொன்றை கொடுத்துள்ளார்.

அதன்படி நடிகர் சூரிக்கு BMW 7 சீரிஸ் சொகுசு கார் ஒன்றை தயாரிப்பாளர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை சூரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement