• Jun 29 2026

மீண்டும் பாக்கியா வீட்டில் தஞ்சமடைந்த ஈஸ்வரி.. அடிதடியில் இறங்கிய எழில்! அதிர்ச்சியில் பாக்கியா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி கோபி வீட்டு வாசலின் முன்னாள் நின்று  அழுது கொண்டு இருக்க, பாக்கியா அங்கு செல்கின்றார்.

இதன்போது ஈஸ்வரி பாக்கியாவை கட்டிப்பிடித்து அழுது நடந்தவற்றை சொல்லி புலம்பி கொண்டிருக்க, அவரை சமாதானப்படுத்தி பாக்கியா வீட்டுக்கு அழைத்து வருகின்றார். வீட்டுக்கு வந்தும் அவர் அழுது கொண்டிருக்க,  எல்லாரும் பதறியடிச்சு வந்து அவருக்கு ஆறுதல் சொல்லுகின்றார்கள்.


ஆனாலும் எழில் கோபம் கொண்டு அவரை உண்டு இல்லை என்று பண்ணுகிறேன் என கோபி வீட்டுக்கு செல்ல, பாக்கியா அவரை தடுத்து நிறுத்தி உங்க அப்பா போல ஆகாத என அட்வைஸ்  கூறுகிறார்.

அதன் பிறகு ஈஸ்வரி சாப்பிடாமல் தொடர்ந்து அழுது கொண்டு இருக்க, பாக்யா வந்து அவருக்கு சாப்பாடு கொடுக்க அதனை இனியா ஊட்டி விடுகின்றார். ராமமூர்த்தியும் இப்ப சரி அவனைப் பத்தி புரிஞ்சுதே உனக்கு என புத்திமதி சொல்லுகிறார்.

Advertisement

Advertisement