தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகருமான சிலம்பரசன் (சிம்பு) இன்றைய தினம், 03.02.2025, தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, தமிழ் திரையுலகம் முழுவதும் சிம்புவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், இயக்குநர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சிம்பு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் படக்குழு, அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் புதிய ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் வெளியாகியதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘அரசன்’ திரைப்படம், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த ஸ்பெஷல் போஸ்டரில், அவரது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மாஸ் மற்றும் இன்டென்ஸ் லுக் இடம்பெற்றுள்ளது. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் அதனை பகிர்ந்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Listen News!