• Apr 18 2026

சர்ச்சைகளைக் கடந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் சிம்புவின் மொத்த சொத்து விபரம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

எஸ்டிஆர் என ரசிகர்களால் அன்புடன் கொண்டாடப்படும் நடிகர் சிம்பு, இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் விமர்சிக்கப்பட்ட காலத்தை கடந்து, தற்போது தனது வெற்றிகளால் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே நடித்து வரும் சிம்பு, நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பின்னணி பாடகர், இயக்குநர், சிறந்த நடனக் கலைஞர் என பல திறமைகளை கொண்டவர். கோலிவுட்டில் கமல்ஹாசன் உள்ளிட்ட மிகச்சிறந்த நடிகர்களுக்கு பிறகு, பல்திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் எனக் கருதப்படுகிறார்.

இடையில் காதல் தோல்விகள் மற்றும் ஆன்மீக பயணம் காரணமாக அவரது திரைப்பயணம் சறுக்கியது. இமயமலை வரை சென்ற சிம்புவைப் பற்றி, 'இனி கம்பேக் இல்லை' , 'சிம்பு அவ்வளவுதான்' என பல ஆரூடங்கள் கூறப்பட்டன. ஆனால் ‘மாநாடு’ படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்து, அந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.


அதனைத் தொடர்ந்து பத்து தல, வெந்து தணிந்தது காடு, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார். இதில் வெந்து தணிந்தது காடு சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், சிம்புவின் சொத்து மதிப்பு 100 முதல் 120 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படும் அவர், பல சொகுசு கார்களையும், சொந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவையும் வைத்துள்ளார்.

பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement