தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழின் உச்சத்தில் காணப்படுபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இதனால் இவர் நேஷனல் கிரஷ் எனவும் கொண்டாடப்பட்டு வருகின்றார்.
கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் ராஷ்மிகா. அதன் பின்பு தமிழில் வெளியான சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. அதில் இவருடைய ஸ்ரீவள்ளி கேரக்டர் பலரையும் கவர்ந்தது.
d_i_a
புஷ்பா 2 திரைப்படம் உலக அளவிலேயே 1800 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இது இந்திய சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாகவும் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு, டான்ஸ் என்பன ரசிகர்கள் மத்தியில் வைரலாகி காணப்பட்டது.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா தனது காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணும் போது எதிர்பாராத விதமாக சிறிய விபத்து நேர்ந்ததாகவும் இதன் காரணத்தினால் அடுத்த பட வாய்ப்புகளை சற்று தள்ளி வைத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்தில் சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி உள்ளன. அதில் அவர் காரில் இறந்து இறங்கும்போது காலை நொண்டி நொண்டி இறங்கி வருகிறார். அதன் பின்பு அவரை வீல் சேரில் வைத்து தள்ளிக் கொண்டு செல்லுகின்றார்கள்.
இதன் போது ராஷ்மிகா மந்தனா தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் முகத்திற்கு மாஸ்க், தலைக்கு கேப் போட்டு மறைவாக செல்லுகின்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!