விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் தான் அருண் பிரசாத். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்டு தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார்.
சின்னத்திரை சீரியல் நடிகரான அருண், பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னரும் சீரியல் நடிகையுமான அர்ச்சனாவை காதலித்ததாக பேசப்பட்டது. ஆனாலும் இது தொடர்பில் இருவரும் நீண்ட நாட்களாகவே மௌனம் காத்து வந்தார்கள்.
d_i_a
இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் எட்டில் நடைபெற்ற ப்ரீஸ் டாஸ்க்கின் போது அருண் சார்பில் அர்ச்சனா உள்ளே சென்றிருந்தார். இதன்போது அவர்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாகவே உலகறிய சொல்லி இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக காணப்பட்டது.
அதன் பின்பு அர்ச்சனா, அருண் பிரசாத் தொடர்பில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிப்படையாகவே பல போஸ்ட்களை பதிவிட்டார். மேலும் அருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த போது அவரை சந்தித்த வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அருண் பிரசாத் பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகின்றது. அதில் அர்ச்சனாவை இந்த வருடத்திற்குள்ளேயே திருமணம் செய்ய இருப்பதாகவும் அதுதான் தங்களுடைய வீட்டில் உள்ளவர்களின் முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அருண் பிரசாத் தெரிவித்த விடயம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக காணப்படுகிறது. மேலும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
Listen News!