தமிழ், தெலுங்கு திரையுலகில் தன்னுடைய எளிமையான நடிப்பு மற்றும் ஸ்டைல் என்பவற்றால் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீதிவ்யா. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மகேஷ் பாபுவுடன் நடித்த தனது குழந்தைப் பருவ அனுபவத்தை சிரித்துக்கொண்டே பகிர்ந்துள்ளார்.
அந்நிகழ்ச்சியில் ஸ்ரீதிவ்யா தன்னையும் மகேஷ் பாபுவைப் பற்றியும் பேசியது அங்கிருந்த ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியதாவது, “நான் ‘யுவராஜ்’ என்னும் தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவுக்கு குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கேன்!”என்றார்.
இதைக் கேட்டு அங்கிருந்த ரசிகர்கள், “அந்தக் குழந்தை நீங்களா..!” என சத்தமிட்டுக் கொண்டார்கள். மேலும், 2000ம் ஆண்டளவில் வெளியான அந்த குடும்பத் திரைப்படத்தில் மகேஷ் பாபுவின் தங்கையாக நடித்த அந்தச் சிறுமி ஸ்ரீதிவ்யா என்பது இப்பொழுது தான் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
அத்துடன் “அந்த வயசில ஒரு சாக்லேட்டுக்காக அண்ணா அண்ணா என்று மகேஷ் பாபு பின்னாடியே திரிஞ்சேன்" எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நேரத்தில நடிக்கும் போது எனக்குத் தெரியவில்லை இப்படி எல்லாம் நடிச்சேன் என்று ஆனா இப்போ நினைத்துப் பார்க்கும் போது ரொம்பவே சந்தோசமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
Listen News!