இசையுலகின் நட்சத்திரமான இளையராஜா இசை மற்றும் மனிதநேயம் என்பவற்றால் பல ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார். அத்தகைய மனிதருடன் பணியாற்றிய இளம் பாடகி சஞ்சனா கல்மஞ்சே சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் இளையராஜா பற்றி யாரும் அறியாத பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதன்போது அவர் கூறியதாவது, “இளையராஜா சார் சந்தோஷமா இருந்தா, பாடிக் கொண்டே இருப்பார் என்றதுடன் அவர் சமீபத்தில் மகிழ்ச்சியாக பாடிய பாடலினை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டிருக்கேன்" எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் “அவர் எப்பவுமே சிரிச்சுக்கொண்டு இருப்பதுடன் எல்லாரையும் கலாய்ச்சுட்டே இருப்பார்" எனவும் தெரிவித்துள்ளார். இது இளையராஜா பணியாளர்களுடன் நெருக்கமாக மற்றும் நகைச்சுவையாக இருப்பதனைக் காட்டுகின்றது.
இளையராஜாவின் இசை மெலோடிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. எனினும் அவர் பாடும் பாடலை சிலர் மட்டும் அருகில் இருந்து அனுபவிக்கக் கூடிய வகையில் காணப்படுகின்றது. சஞ்சனா இப்பொழுது அந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்ததன் மூலம், ரசிகர்கள் மனதில் மீண்டும் இளையராஜா இடம்பிடித்துள்ளார்.
Listen News!