• Sep 11 2026

கோட் பட டிக்கெட்களுக்கு எகிறும் விற்பனை விலை... ஆனாலும் இதுதான் சாதனையா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோட் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் காணப்படுகிறது. இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி சுமார் 5000 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  படத்தை பார்த்த விஜய், வெங்கட் பிரபுவை கட்டி அணைத்து பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

கோட் படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கேமியோ கேரக்டரில் இணைந்துள்ளதாக கூறப்படும் சூழலில் அவற்றை படக்குழுவினர் சஸ்பென்ஸ் ஆகவே வைத்துள்ளார்கள்.


இந்த நிலையில், கோட் படத்தை விநியோகஸ்தர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியதாக ரோகிணி தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார். விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் படங்கள் ஐந்து முதல் ஏழு சதவீத விலை ஏற்றத்துடன் தான் வாங்க முடியும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் ரோகிணி திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் விஜய் படத்தை பார்த்த பின் கொண்டாட்டத்துடன் தான் வீடு திரும்புவார்கள் என்பதையும் கூறியுள்ளார். அத்துடன் ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று  தீர்ந்துள்ளதாகவும் இந்த ஆண்டில் மிகப்பெரிய ப்ரீ புக்கிங் படமாக கோட் சாதனை படைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement