• May 20 2024

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கிற்கு இத்தனை கோடி சம்பளமா? அசரவைத்த கமலின் ஒரு நாள் சம்பள விவரம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் ஹாசன், அதன் தொகுப்பாளராக கடந்த 7 வருடங்களாக இருந்து வருகிறார்.  

தற்போது நடந்து வரும் 7ம் சீசனில் ரசிகர்கள் கமல்ஹாசனையும் சேர்த்து ட்ரோல் செய்கிறார்கள். அதனால் அவர் அடுத்த சீசன் வருவாரா என கேள்வியும் எழுந்திருக்கிறது.  

இந்த நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் ஷூட்டிங்கிற்காக மட்டும் கமல் 1.5 கோடி ருபாய் சம்பளம் பெறுகிறாராம் என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement