• Jan 19 2025

SK23 படக்குழுவுடன் பிறந்த நாளை கொண்டாடிய எஸ்கே! தடபுடல் பிரியாணி விருந்தும் ஏற்பாடு! வைரல் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். 

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்றைய தினம் தனது  பிறந்த நாளை கொண்டாடிய வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிய 'எஸ்கே 23' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, குறித்த படப்பிடிப்பில்  தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.


அதன்படி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏஆர் முருகதாஸ், ருக்மணி வசந்த் உட்பட்ட பட குழுவினர் பலரும் கலந்துகொண்டு, அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்கள்.


இதை தொடர்ந்து தனது பிறந்தநாள் பரிசாக பட குழுவினருக்கு ஸ்பெஷல் பிரியாணியை ஏற்பாடு செய்துள்ளார் எஸ்கே.

இவ்வாறு தனது பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயனின் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதே வேளை நேற்றைய தினம் வெளியான அமரன் படத்தின் டீசர் பெரும் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement