• Jul 27 2024

சென்னையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்! ஆக்ரோஷமாக கூச்சலிட்ட விஜய் ஃபேன்ஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது பரபரப்பாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் கட்சியின் கொடி கலர் அடர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் இந்த கட்சிப் பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இன்னொரு பக்கம் விஜய்யின் 68 வது படமான கோட் படத்தின் பட பிடிப்புக்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கோட் திரைப்படம் தொடர்பிலான அப்டேட்களும் இடைக்கிடையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை போரூரில் நடைபெற்று வரும் GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்துள்ளார் நடிகர் விஜய்.

தற்போது இது தொடர்பிலான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement