• Mar 14 2026

தர்சினியின் வீடியோவை அனுப்பியது இவரா? சவால் விட்ட குணசேகரன்! டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வைக்கும் டைரக்டர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஜனனி,  நந்தினி மற்றும் ரேணுகா ஜாமினில் ஜெயிலிலிருந்து வெளியே வந்திருக்கும் நிலையில், மொத்த குடும்பத்திற்கும் குணசேகரன் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அதாவது, தர்ஷினி கோர்ட்டுக்கு அனுப்பிய வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில்,  கோர்ட்டில் இருந்து வெளியே வந்த குணசேகரன், என் பொண்ண யாரு கடத்தி வச்சுருக்கா என்று கேட்க, சாருபாலா எனக்கு தெரியும் குணசேகரன்.. என்று பதில் சொல்லுகிறார்.


இதையடுத்து அவர் வீட்டுக்கு வர, ஈஸ்வரியின் அப்பா என் பொண்ணு உயிருடன் தான் இருக்கா? அவள விட்டு வச்சிருக்கியா? இல்ல கொன்னுட்டியா? என்று கேள்வி கேட்க,  என் பொண்ண எப்படி கண்டுபிடிக்கணும்னு எனக்கு தெரியும், இந்த குணசேகரன் தயவு இல்லாமல் இவர்கள் எப்படி வாழ்றாங்க என்று பார்க்கிறேன் என சவால் விட்டு செல்கிறார். இது தான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ.

அதேவேளை, ரவுடிகளிடமிருந்து தப்பித்த தர்ஷினி, எப்படி அந்த  வீடியோவில் பேசி இருப்பார் என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளார்கள்.

அத்துடன் தர்ஷினி கடத்தப்பட்ட விடயத்தில் பெண்கள் துணிந்து செயற்பட்ட விதம் எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை எதிர்படுத்தியது.

ஆனாலும் தற்போது மீண்டும் குணசேகரனிடம் அவர்கள் அவமானப்பட்டு நிற்பது இந்த சீரியல் மீது ரசிகர்களுக்கு சலிப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement