• Apr 15 2026

நிச்சயம் படம் வெற்றி தான் ரிலீஸ் பண்ணுங்க... அயலான் திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறிய வைரல் பதிவு...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தாலும் அதற்பிறகு இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியில் வெற்றி தான் அடைந்தது. 


தனது நடிப்பாலும், நகைச்சுவையாழும், நடனத்தினாலும் பல ரசிகர்களை தன்வசம் கவர்ந்து வைத்துள்ளார். தனது படத்தை தாண்டி வளர்ந்து வரும் கலைஞர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த ஜோ திரைப்படத்தை பார்த்து படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 


இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக அயலான் படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தோட கேப்டன் மில்லர், லால் சலாம் ஆகிய படங்கள் போட்டி போட்டாலும் சிவகார்த்திகேயன் படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் கண்டிப்பாக ரிலிஸ் செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.


தற்போது சிவகார்த்திகேயன் இந்த படத்தின் அவுட்புட் தெரிந்து நீங்கள் இரண்டாம் பாகத்திற்கு தயாராகுங்கள் என இயக்குனர் ரவிகுமாரிடம் சொல்லி விட்டாராம். இவரே இப்படி நம்பிக்கையாக சொல்லி இருக்கிறார் அப்போது படம் நிச்சயம் வெற்றிதான் என ரசிகர்களும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.  

Advertisement

Advertisement