• Sep 20 2024

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி ஒரு சிலருக்கு பிடிக்கல; இமான் பொய்ச்செய்தி பரப்புகிறார்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் டி.இமான்.

சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை இமான் வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் இமான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும் இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.


இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான், 'இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம். வரும் காலங்களில் அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. வெளிப்படையாக சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும். என் வாழ்க்கையில் நடந்த துன்பங்கள், வலிகளுக்கு சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய காரணம். அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியதால், அவர் செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.' எனத் தெரிவித்திருந்தார். இது குறித்த பேச்சு தான் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது.


இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அதீத வளர்ச்சி பிடிக்காத ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் தான் இமான் இப்படி செயற்படுகிறார் என்று நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 'இமானுக்கு தனது குழந்தை மீது இருக்கும் பாசத்தால் சிவா செய்த துரோகத்தை வெளியில் சொல்லவில்லை என்று சொன்னார். அப்போ,, சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்களின் எதிர்காலம் என்னஆகும்? தயவு செய்து யாராக இருந்தாலும்  அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள்' என்று நடிகை அனுபரமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement