• Sep 20 2024

நாய் சேகர் பட பாடலின் நடனத்தை காப்பியடித்த சிவகார்த்திகேயன்- நன்றி சொல்லி கலாய்த்த காமெடியன் சதீஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் உள்ள முக்கிய நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “டான்”. இந்தப் படத்தை இந்தப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளதோடு பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அத்தோடு இந்தத் திரைப்படம் மே 13 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, இப்படத்தின் மூன்றாவது பாடலான “பிரைவேட் பார்ட்டி” பாடலை அனிரூத் இசையில் ஜோனிடா காந்தியும் சேர்ந்து இப்பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடல் வீடியோவில் ஒரு நடனம் சதீஷ் நடித்த நாய் சேகர் படத்தில் இடம்பெற்றுள்ள “edakku modakku” என்ற பாடலில் வரும் நடனம் போல் அமைந்துள்ளதால் இதற்கு சதீஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

அதாவது, நடிகர் சதீஷ் நாய் சேகர் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் எங்கள் பாடலை ப்ரோமோஷன் செய்ததற்கு ‘டான்’ படக்குழுவிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement