• Jan 18 2025

பிறந்தநாள் கொண்டாடும் ராஜமாதா! சொத்துமதிப்பு விபரம் இதோ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்து அனைவரையும் அசரவைத்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்திய திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என தனது இளம் வயதில் இருந்து முக்கிய நடிகையாக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.


அனைவருடைய மனதில் நிற்கக்கூடிய வகையில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரம் என்றால், அது பாகுபலி படத்தில் வரும் ராஜமாதா ரோல் தான். "இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்" என ரம்யா கிருஷ்ணன் பேசும் வசனம் அனல்பறக்கும்.


தெலுங்கு இயக்குனரான வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்விக் வம்சி எனும் ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில், இன்று 54வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 98 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. 

Advertisement

Advertisement