• Feb 05 2026

குழந்தைக்காக புது வீடு வாங்கிய தீபிகா.. எத்தனை கோடி தெரியுமா? வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் தீபிகா படுகோன். இவர் பிரபல நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட பலருடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் ஜவான், பதான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், ஆறு ஆண்டுகள் கழித்து இந்த வருடம் தான் கர்ப்பமானார். இவர்  கர்ப்பமாக இருக்கும் போதும் கல்கி 28 98 ஏடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவிலும் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். ரன்வீர் சிங்குடன் சமீபத்தில்  எடுத்த பிரக்னன்சி போட்டோஷூட் இணையத்தில் படு வைரல் ஆனது.


இதைத்தொடர்ந்து தீபிகா படுகோனுக்கு கடந்த எட்டாம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். தனது குழந்தையை நெஞ்சில் அணைத்து  வைத்த மாதிரி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்  தீபிகா.

இந்த நிலையில், இன்றைய தினம் தீபிகா படுகோன் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ச் ஆகி உள்ளார். இதைத்தொடர்ந்து குழந்தையுடன் அலிப்பாக்கில் புதிதாக வாங்கிய பங்களாவிற்கு சென்றுள்ளார்கள்.

22 கோடி ரூபாய்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கிய அலிபாக் பங்களாவிற்கு  இந்த ஜோடி சென்றுள்ளது .இந்த பகுதியில் அமிதாபச்சன், விராட் கோலி உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் வீடுகளை வாங்கி உள்ளார்களாம்.


Advertisement

Advertisement