• Jan 18 2025

மீண்டும் பிச்சைக்காரராக மாறிய மனோஜ்.. விஜயா, ரோகிணி அதிர்ச்சி.. குஷியில் மீனா..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்று இரண்டாவது கார் வாங்கி இருக்கும் முத்து மற்றும் மீனா குசியுடன் இருக்கின்றனர். அதன்பின்னர் டிரைவர் இடம் சாவியை கொடுத்து கவனமாக காரை ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

இந்த நிலையில் இரண்டாவது கார் வாங்கியதை மனோஜ் மற்றும் விஜயா கேலி செய்ய மீனா அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கிறார்.  வழக்கம் போல் இந்த சண்டையை அண்ணாமலை தீர்த்து வைக்கிறார்.

இந்த நிலையில் தனக்கு பிரச்சனை தருபவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு தன்னுடைய பார்க் நண்பர் மூலம் ஜோசியர் ஒருவரிடம் மனோஜ் செல்கிறார். அந்த ஜோசியர் பிரச்சினை வருவது உறுதி என்று கூறியதோடு ஒவ்வொரு நாளும் நான் சொல்லும் கலரில் சட்டை அணிந்தால் பிரச்சனை இருக்காது என்று கூறி மனோஜ் சட்டையை கழற்றி ஒரு மஞ்சள் துண்டை கொடுத்து இன்று இதைத்தான் நீ அணிய வேண்டும் என்று கூறுகிறார்  



இந்த நிலையில் மீனா மற்றும் முத்து உண்டியல் வாங்கிக் கொண்டு வர, அப்போது விஜயா அதை கேலி செய்கிறார். உண்டியலை கையில் ஏந்தி தெருத்தெருவாக பிச்சை எடுத்து தான் மேலே ரூம் கட்ட போகிறீர்களா என்று கேட்க, மஞ்சள் துண்டை போர்த்தியபடி அம்மா என்று மனோஜ் பரதேசி கோலத்தில் வருகிறார்.

இதனை அடுத்து முத்து, ’அம்மா சொன்ன மாதிரியே பிச்சைக்காரன் வந்துவிட்டான்’ என்று சொல்ல , விஜயா அதிர்ச்சி அடைந்து ’ஏன் இப்படி மஞ்சள் துண்டை போட்டு கொண்டு வருகிறாய்’ என்று கூறுகிறார்.  இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறி உள்ளே மனோ செல்கிறார். அப்போது ரோகிணி வந்து மனோஜிடம் என்ன என்று விசாரிக்க ஜோசியர் கூறியதை மனோஜ் கூற, அப்போது ரோகிணி உன்னை திருத்தவே முடியாது என்று எரிச்சல் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement