மோகன்லால் நடித்த 'லூசிபர்' படத்தின் தொடர்ச்சியாக உருவான ‘எம்புரான்’ தற்பொழுது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. தற்பொழுது வெளியான தகவல்களின் படி, விமர்சனங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தில் 17 சீன்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இத்தகவல் திரையுலகத்தில் அதிகளவான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா விமர்சகர்கள் மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்களும் தற்பொழுது இதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அதிகாரிகள் தற்பொழுது ‘எம்புரான்’ படத்தின் சில காட்சிகளில் இந்துக்கள் மோசமாக விமர்சிக்கப்படுவதாகவும், அதிக படியான வன்முறைகள் கொண்டுள்ளன எனவும் கூறியுள்ளனர். இதனால் தான் 17 சீன்கள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. எம்புரான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் தற்பொழுது வெளியான தகவல் மோகன்லால் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!