• Apr 20 2026

கருப்பு நிற சேலையில் மின்னும் சிம்ரன்.. வாயை பிளந்து ரசிக்கும் இளசுகள்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகை சிம்ரன், இன்று வரை தனது கவர்ச்சியாலும் திறமையாலும் பேசப்பட்டு வருகிறார். ஆரம்ப காலத்திலேயே நடிப்பு, நடனம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய அவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக அவரது நடன திறமை ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது. இதனால் அவரை ரசிகர்கள் “இடையழகி” என அன்புடன் அழைத்தனர்.


ஒருகட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிய நிலையில், 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

பின்னர் மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய சிம்ரன், பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கருப்பு நிற சேலையில் எடுத்துக்கொண்ட அவரது புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அவரின் அழகையும் இளமையையும் பாராட்டி, மீண்டும் பழைய சிம்ரனைப் பார்க்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement