• Mar 26 2026

புகைப்படத்துடன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...! அஜித்துடன் இணையும் கலக்கல் காமெடியன்...

shali / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் 2 வருடமாகியும் வெளியாகாத மகிழ்திருமேனி இயக்கும்  விடாமுயற்சி  படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டு இருக்கிறார்கள். மற்ற பக்கம் அவர் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதோடு, கார் ரேசிங்கிலும் பங்கு பற்றி வருகிறார். 


தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு, Bulgaria-வில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், நட்டி, அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்க மற்றொரு முன்னணி நட்சத்திரமும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

d_i_a


அவர் நகைச்சுவையில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் யோகி பாபு தான்.  இந்த குட் பேட் அக்லி படப்பிடிப்பின் பொது தல அஜித்தின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் யோகி பாபு. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்க்கு முன்னர் இவர்களுக்கிடையே பிரச்சினை ஓடிக்கொண்டிருந்ததாக தகவல்கள் வந்தது. தற்போது இந்த புகைப்படம் அது பொய் என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 


Advertisement

Advertisement