• Jun 04 2023

நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து... பிரபல நடிகைக்கு கண்ணில் பலத்த காயம்... அவரே கூறிய ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் இஷா தல்வார். மேலும் இவர் தமிழில் பத்ரி இயக்கிய 'தில்லு முல்லு', மித்ரன் ஜவஹர் இயக்கிய 'மீண்டும் ஒரு காதல் கதை', ஆர்ஜே.பாலாஜி நடித்த 'ரன் பேபி ரன்' படங்களில் நடித்துள்ளார். 


அதுமட்டுமல்லாது தெலுங்கு, மலையாளத்திலும் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது ‘சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் நடித்தபோது தனது கண்ணில் காயம் ஏற்பட்டதாக இஷா தல்வார் தெரிவித்துள்ளார்.


அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி அவர் கூறுகையில் "இதன் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பு உப்பளத்தில் நடந்தது. நள்ளிரவு என்பதால் இருட்டாக இருந்தது. வெடிபொருள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. அப்போது திடீரென்று வெடித்ததில் எனது இடது கண்ணில் பலத்தக் காயம் ஏற்பட்டது. கண்ணைத் திறக்க முடியவில்லை. உடனடியாக 2 மருத்துவர்களைச் சந்தித்து நான் ஆலோசனை பெற்றேன். கண்ணை மூன்று நாட்கள் திறக்கக் கூடாது என்றார்கள். அந்த நாட்களில் இருளில் இருந்தேன். காயம் சரியான பிறகு படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டேன்" என தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement