• Jun 04 2023

குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் அபிராமி..அவரே பதிவிட்ட புகைப்படங்கள்..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

வானவில், விருமாண்டி போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் அபிராமி. 


இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். 


இவர் ராகுல் என்பவரை  திருமணம் செய்த நிலையில் பெண் குழந்தை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 


இதுபற்றிய தகவலை அன்னையர் தினமான நேற்று ரசிகர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் அறிவித்துள்ளார்.


மகள் மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து அபிராமி வெளியிட்ட, ‛‛நானும் ராகுலும் கடந்தாண்டு கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தோம். அப்போது முதல் எங்கள் வாழ்க்கை அழகாக மாறியது. இன்று(மே 14) அன்னையர் தினத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராக நான் கருதுகிறேன். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்,'' என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement