• Jan 07 2026

‘சிவா மனசில சக்தி’ கூட்டணி மீண்டும் இணைவு.. பட டைட்டிலே சும்மா பிண்ணுதே.! லீக்கான வீடியோ

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

சினிமா ரசிகர்களுக்கு பிடித்த இயக்குநர் ராஜேஷ், நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் “சிவா மனசில சக்தி” படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அந்த படத்தின் வெற்றியும், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனமும் பெற்றது. இதன் பின், இந்த மூவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த புதிய திரைப்படத்தின் பெயர் “ஜாலியா இருந்த ஒருத்தன்” என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன், படக்குழு சமூக வலைத்தளங்களில் கலகலப்பான ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை உற்சாகமாக தூண்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் மூலம் இயக்குநர் ராஜேஷ், நடிகர் ஜீவா, மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீண்டும் ஒரு தோழமை கூட்டணியை உருவாக்கியுள்ளனர். “சிவா மனசில சக்தி” படத்தின் வெற்றி மற்றும் விமர்சன ரீதியான பாராட்டுகள் இந்த புதிய படத்திற்கும் முன்னோட்டத்தை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement