• Jan 08 2026

பார்வதி கேடு கெட்ட ஜென்மம்.. செருப்பால அடிக்கணும்.! நடிகை இப்புடி கிழிக்கிறாங்களே.!

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் ஒளிபரப்பான கார் டாஸ்க் பார்வையாளர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


அந்த டாஸ்க்கின் போது, காருக்குள் இருந்த போட்டியாளர் சாண்ட்ராவை மற்ற போட்டியாளர்களான பார்வதி மற்றும் கம்ருதீன் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்ற காட்சிகள் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியையும், கடும் எதிர்ப்பையும் உருவாக்கின. 

சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் குறித்து பலரும் விமர்சனம் செய்து, இது மனிதநேயத்திற்கும் விளையாட்டு விதிகளுக்கும் எதிரான செயல் எனக் கருத்து தெரிவித்தனர்.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதி, நேற்று நடந்த எபிசோட்டில் முக்கிய முடிவை எடுத்தார். பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகிய இருவருக்கும் ரெட் கார்ட் வழங்கி, அவர்களை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார். இந்த முடிவு பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 


இந்த விவகாரம் குறித்து, பிரபல சீரியல் நடிகை லட்சுமி சமூக வலைத்தளங்களில் தனது ஆழ்ந்த ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்துகளில், பார்வதி மற்றும் கம்ருதீனின் நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், அடிப்படை மனிதநாகரிகம் இல்லாத செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது, " பார்வதி மாதிரி ஒரு கேடு கெட்ட ஜென்மத்தை பார்த்ததே இல்ல. பொறம்போக்கு நாயி... உங்க அம்மா டீச்சரா? உள்ள வந்த அன்னைக்கு ரெண்டு அரை கொடுத்து இருந்திருந்தாங்கன்னா நீ திருந்திருப்ப... எங்க வீட்டு வாசலில இருக்கிற நாய்க்கு சமம் நீ. உன்ன அப்புடியே செருப்பால செவுளில அடிக்கணும். கம்ருதீன் அக்காவுக்கு குழந்தைகள் இல்லையா.? இப்படி ஒரு கேவலமான ஜந்துவ வளர்த்து விட்டு இருக்கீங்க. அடிப்படை நாகரீகம் கூட அந்த நாய்ங்களுக்கு இல்லையா.?" என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement