பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கபப்பட்ட நாளிலிருந்து விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.பல பிரச்சினைகள், சண்டைகள், என கலை கட்டி வருகிறது. மேலும் அவ்வபோது அசல் கோளாறு செய்யும் காதல் லீலைகளும் நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்துள்ளது.
மேலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட முக்கிய டாஸ்க் தான் 'நீயும் பொம்மை நானும் பொம்மை'.ஏற்கனவே இந்த டாஸ்கால் பல பிரச்சினைகள் உருவான நிலையில், தற்போது செரீனாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மூச்சு திணறலால் டால் ஹவுஸ் உள்ளேயே அவர் மூச்சு திணறி கீழே விழுந்து அழுது கொண்டிருக்கிறார்.
அவரை அசீம் வீட்டிற்குள் தூக்கி செல்ல, மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் முதலுதவி கொடுக்கின்றனர்.பின்னர் பிக்பாஸ் செரீனாவை மருத்துவ அறைக்கு கொண்டுவர சொல்கிறார்.அதனை அடுத்து விக்ரமன் உடல்நிலை முடியாதவர்கள் ஏன் இந்த விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என கூற ஏனையவர்கள் அவரை சண்டை போடும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
உடல்நிலை சரியாகிய பின்னர் செரினாவிடம் பேசும் பிக்பாஸ் உங்களால் இந்த போட்டியை ஈடு கொடுத்து விளையாட முடியாததால், இந்த போட்டியில் இருந்து அவர் விளக்கப்படுவதாக கூறுகின்றார்.மேலும் செரினாவின் மூச்சு திணறலை பார்த்து நெட்டிசன்கள் பலரும், அவர் பயங்கரமாக பர்பாமென்ஸ் செய்கிறார் என கூறி வருகிறார்கள். இது குறித்த வீடியோக்கள் தான் வைரலாகி வருகிறது.
This has to be the most amazing performance ever by #Sherina. Also why is #Manikandan suddenly acting so feral. #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/4V7SbFdpiR
Listen News!