• Nov 28 2022

மீண்டும் இணையும் கமல் - லோகேஷ்..வெளியான வெறித்தனமான அப்டேட்..!

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

 கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்ததோடு இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்திருந்தார்.இப்படத்தை ராஜ்கமலின் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.


இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் படக்குழுவினர் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்திருந்தார்.இந்நிலையில் ராஜ் கமல் நிறுவனம் விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்  "உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் வெகுவிமர்சையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.


 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.