• Jan 19 2025

நிறைமாத கர்ப்பிணியை இப்படியா டார்ச்சர் செய்வது? அமலாபால் கணவர் இவ்வளவு கொடூரமானவரா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான மைனா என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர் தான் நடிகை அமலா பால். இந்தப் படம் இவரது கேரியரில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயுடன் தலைவா படத்திலும் நடித்திருந்தார். மேலும்  தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, லவ் பெயிலியர், முப்பொழுதும் உன் கற்பனை, ஆடை ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து பிரபல இயக்குநர் விஜயை திருமணம் செய்த அமலா பால், கருத்து வேறுபாட்டின் காரணமாகவே அவரிடம்  இருந்து விவாகரத்து பெற்றார்.


அதன் பின்பு தனது நண்பனான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அமலாபால். அதில் அவரது கணவர் காதில் கூச்சலிட்டு பாடுவதை சகித்துக் கொள்ளாமல் காதை மூடிக்கொண்டு உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணை இப்படியா துன்புறுத்துவது என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.


Advertisement

Advertisement