• Dec 05 2022

தியேட்டர், ஜிம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் நயன்தாரா கட்டும் புதிய வீடு- இத்தனை கோடி செலவா?

Listen News!
stella / 1 month ago
image
Listen News!


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த சில வாரங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். அதாவது இவர் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்துக் கொண்டார். இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஹனி மூன்களுக்கு சென்று வந்த இவர்கள் அண்மையில் வாடகைத் தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகளையும் பெற்றுக் கொண்டனர். இதனால் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் விசாரணை நடத்திய பொது இருவரும் முறையாகவே குழந்தை பெற்றுக் கொண்டதாக ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர்.


இதனை அடுத்து நயன்தாரா தற்பொழுது பிரமாண்ட வீடு ஒன்றினைக் கட்டி வருகின்றாராம்.வீட்டின் உள் கட்டமைப்பு மட்டும் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் செலவில் உருவாகி வருகிறது. இதற்காக மும்பையை சேர்ந்த பிரபல நிறுவனத்தை நயன் பிரத்தியோகமாக தொடர்பு கொண்டுள்ளாராம்.

 இவ் வீட்டில் தியேட்டர், ஜிம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளனவாம். அதுமட்டுமல்லாமல் குளியலறை மட்டும் கிட்டத்தட்ட 1500 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதைக் கேட்ட பிரபல தொழிலதிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பலரும் வியக்கும் வகையில் நயன்தாரா கட்டி வரும் வீடு தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது