தெலுங்கு சினிமாவில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஷாலினி பாண்டே, இன்று இந்திய சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த அந்த படம், அவருக்கு மட்டுமல்லாமல் முழு படக்குழுவிற்குமே பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அர்ஜுன் ரெட்டி படத்தில் அவரது இயல்பான நடிப்பு, எமோஷனல் வெளிப்பாடு மற்றும் கதாபாத்திரத்தின் ஆழம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஷாலினி பாண்டேவுக்கு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலிருந்தும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

அர்ஜுன் ரெட்டிக்குப் பிறகு, ஷாலினி பாண்டே தெலுங்கு சினிமாவை தாண்டி, ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார்.
தமிழில் இவர் நடித்த படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், ஹிந்தி சினிமாவிலும் சில முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
நடிப்பு மட்டுமின்றி, ஷாலினி பாண்டே தனது ஃபேஷன் சென்ஸ் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிரப்படும் ஒவ்வொரு புகைப்படமும் குறுகிய நேரத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸினைக் குவித்து விடுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புதிய புகைப்படங்களில், அவர் ஒரு புதிய லுக், வித்தியாசமான ஸ்டைல் மற்றும் கான்ஃபிடன்ஸ் நிறைந்த போஸ்களுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Listen News!