இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக விஜயின் இறுதிப் படமான ஜனநாயகன் படம் காணப்பட்டது. ஆனாலும் இந்த படத்தின் சென்சார் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இது பலருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் அந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் மறு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின்பு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், சென்சார் சான்றிதழ் வழங்க உதவி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
எனினும் நீதிமன்ற தீர்ப்பும் சாதகமாக கிடைக்கவில்லை. இதனால் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்பு படத்திற்கு சென்சார் சான்று கோரி ரிவைசிங் கமிட்டியிடம் அனுப்பியுள்ளது.

மேலும் சென்சார் போர்டு பரிந்துரைத்த மாற்றங்களை செய்வதற்கு படக்குழு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அந்த படத்தில் உள்ள சில சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகவும், படத்தின் மொத்த நீளம் 20 நிமிடங்கள் வரை குறைய கூடும் என்று கூறப்பட்டது.
மேலும், ஜனநாயகன் படத்தின் சென்சார் சார்பு தொடர்பான மறு ஆய்வு குழுவை தயாரிப்பு நிறுவனம் அனுகி உள்ளதால் சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதற்கு பதிவுத்துறைக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஹை கோர்ட்டில் விசாரணை செய்யப்பட உள்ளது. எனவே ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் சார்பாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!