தமிழ் சினிமாவில் 80, 90 ஆம் ஆண்டு கால பகுதிகளில் கலக்கிய ஜோடிகளில் ஒன்றுதான் ரஜினி - ராதிகா ஜோடி . இவர்கள் இணைந்து நடித்த படங்கள் ஹிட் கொடுத்துள்ளன. அதேபோல அவர்கள் இருவரும் இன்று வரை சினிமா துறையில் பயணித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ள நினைவுகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதன்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகா சரத்குமார் ரஜினிகாந்த் பற்றி கூறுகையில், எல்லோரும் ரஜினிகாந்தை ரஜினி சார் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். ஆனால் நான் அவரை எப்போதும் ரஜினி என்றுதான் கூப்பிடுவேன். அந்த அளவுக்கு நாங்கள் நெருக்கமான நண்பர்களாக பழகி இருக்கின்றோம்.
ஆரம்ப காலங்களில் இரவு ஷூட்டிங் முடிந்த பிறகு ரஜினியின் பைக்கில் அவருடன் சேர்ந்து சென்னை நகரத்தை சுற்றியும் பார்த்துள்ளேன். அந்த நேரங்களில் ரஜினி “இந்த இடத்தில் நான் ஒருகாலத்தில் படுத்து தூங்கியிருக்கிறேன், இங்கே தான் சாப்பிட்டேன்” என்று தனது வாழ்க்கைப் போராட்டங்களை சொல்லியதாக ராதிகா கூறினார்.

இன்று அவர் அடைந்துள்ள உயரத்திற்கு பின்னால் எவ்வளவு பெரிய கஷ்டம் இருக்கிறது என்பதை அப்போதுதான் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரே மனிதருக்குள் இரண்டு வித்தியாசமான முகங்களை நான் பார்த்திருக்கின்றேன். ஒரு பக்கம் ரொம்ப எளிமையான மனிதர் இன்னொரு பக்கம் தன் தொழிலில் மிகவும் ஒழுக்கமாகவும் பொறுப்புடனும் இருப்பவர் அந்த இரண்டுமே ரஜினியின் மிகத் தெளிவாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு ராதிகா சரத்குமார் ரஜினி பற்றி தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, அவர் ஆரம்பத்தில் எளிமையான வாழ்க்கை, அவருடைய போராட்டங்கள் சக நடிகைகளுடன் கொண்ட நட்பு ஆகியவை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளன.
Listen News!