பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மதராஸி’ வெளியீட்டு எண்ணிக்கையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றி வருவது இந்த படத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்குமுன், ஆகஸ்ட் 24-ஆம் தேதி இசைவெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியதாவது: “இந்தக் கதையை நான் ஏற்கனவே 7 வருடங்களுக்கு முன்பு ஷாருக்கானுக்கு கூறியிருந்தேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் சூழ்நிலைகளால் அது நடக்கவில்லை. சிவகார்த்திகேயனுக்கு இந்த கதை சரியாக அமையும் என நம்பி இயக்கினேன். இப்படத்தில் அவர் ‘ரகு’ என்ற வேடத்தில் நடித்துள்ளார். இது ஒரு சாதாரண மனிதனிலிருந்து சிறு அப்பாற்பட்ட கதாப்பாத்திரம்.” திரைப்படத்தின் நேரம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். தற்போது புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Listen News!