• Jan 18 2025

சொகுசு பங்களா-சொகுசு கார்கள் என வாழும் ஷாருக்கான் முழு சொத்து மதிப்பு..வாயடைத்துப்போன ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் பாட்ஷா என்றும் கிங் கான் என்றும் கொண்டாடப்பட்டு வரும் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் இன்று தனது 57வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக  கொண்டாடி வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் இவரின்  சம்பளம், சொத்து மதிப்பு எல்லாம் கேட்டாலே தலை சுற்றும் அளவுக்கு உள்ளது. ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ராஜ வாழ்க்கை பற்றி லேசாக இங்கே அலசுவோம்.

1965ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி டெல்லியில் பிறந்தவர் .இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான். 80களில் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து வந்த ஷாருக்கான் 1992ல் வெளியான தீவானா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அத்தோடு  விஜய்சேதுபதி போல ஆர்ம்பத்தில் இவரும் வில்லனாக நடித்துள்ளார். பாஸிகர், தார் மற்றும் அஞ்சாம் உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து மிரட்டி உள்ளார். எனினும் அதன் பின்னர் ஹீரோவாக அவர் நடித்த படங்கள் எல்லாம் வெள்ளி விழா காண பாலிவுட்டின் முன்னணி நடிகராக மாறினார்.


அதாவது பாஸிகர், தீவானா, தில்வாலே துல்ஹானியா லே ஜாயாங்கே, குச் குச் ஹோட்டா ஹை, டான், மை நேம் இஸ் கான், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர், டான் 2 என ஏகப்பட்ட படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. அத்தோடு பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் முன்னிலையில் உள்ளார். அமீர்கான், சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் என மூன்று கான் நடிகர்களின் கைகளில் தான் பாலிவுட்டே பல ஆண்டுகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதில் கிங் கான் என்கிற பட்டம் ஷாருக்கானுக்குத்தான்.

மேலும் நடிகர் ஷாருக்கானின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 720 மில்லியன் டாலர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மதிப்பின் படி கிட்டத்தட்ட 6000 கோடி என சொல்லப்படுகின்றது.சல்மான் கான் 350 மில்லியன் டாலர்களும், அமீர்கான் 215 மில்லியன் டாலர்களும் சொத்து வைத்துள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனம், சிஜி நிறுவனம், மற்றும் பிற பிசினஸ்கள் மூலம் ஷாருக்கான் இத்தனை கோடிக்கு சொந்தக்காரர் என சொல்லப்படுகின்றது.. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனும் ஐபிஎல் அணியும் ஷாருக்கானிடம் உள்ளது.


அதாவது பதான், ஜவான், டன்கி என அடுத்தடுத்து 3 பெரிய படங்களில் நடித்து வரும் ஷாருக்கானும் சரியான கார் பைத்தியம் என்று தான் சொல்ல வேண்டும். அவரிடம் ஒட்டுமொத்தமாக 12 சொகுசு கார்கள் உள்ளதாக சொல்கின்றனர். புகாட்டி வெய்ரோன், ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கூப், பென்ட்லி, பிஎம்டபிள்யூ 6 மற்றும் 7 சீரிஸ், ஆடி ஏ8எல், லேண்ட் ரோவர் ரேஞ்ச், டொயாட்டா க்ரூய்ஸ், மிட்சுபிஷி பஜேரோ, ஹுண்டாய் கிரேட்டோ மற்றும் வால்வோ பிஆர் 9 கார்களை வைத்துள்ளார்.

அத்தோடு மும்பை மான்ஹாட்டில் மிகப்பெரிய பங்காளா வைத்துள்ள ஷாருக்கான் லண்டனில் ஒரு சொகுசு பங்களா, துபாயில் ஒரு சொகுசு பங்களா மற்றும் சில பங்களாக்களை வைத்திருப்பதாக சொல்கின்றனர். ஆனால், வெளிநாடுகளில் இவர் வைத்துள்ள வீடுகளின் புகைப்படங்களை இதுவரை இவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement