• Jan 19 2025

’ராயன்’ தனுஷ் ஸ்க்ரிப்டே இல்லையா? பரவி வரும் வதந்திக்கு செல்வராகவன் பதிலடி..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமான ’ராயன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, அந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ’ராயன்’ படத்தின் கதை, திரைக்கதை இரண்டுமே தனுஷ் உடையது கிடையாது என்றும், அவரது சகோதரர் செல்வராகவன் தான் இந்த படத்தின் கதையையும் திரைக்கதையையும் எழுதிக் கொடுத்தார் என்றும் தனுஷ் தனது பெயரை மட்டும் பயன்படுத்திக் கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் வதந்தியை பரப்பி வந்தனர்.

இந்த வதந்தி காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில் இது குறித்து செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார். ’நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ’ராயன்’ திரைப்படத்தின் கதையை நான் எழுதியதாக சிலர் கூறி வருகின்றனர். இது தவறான தகவல், ராயன் படத்தின் கதைக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, இது முழுக்க முழுக்க தனுஷ் கதை தான், தனுஷ் தான் கஷ்டப்பட்டு திரைக்கதை அமைத்துள்ளார். எனவே இது போன்ற வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். 


ஏற்கனவே தனுஷ் இயக்கிய ’பா பாண்டி’ என்ற திரைப்படமே அவருடைய கதை இல்லை என்றும் அப்போது அவருடைய மனைவியாக இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை தான் என்றும் ஒரு செய்தி பரவியது. தற்போது மீண்டும் ’ராயன்’ படத்தின் கதை செல்வராகவன் உடையது என்று பரவிக் கொண்டிருக்கும் வதந்தியில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement