• Sep 19 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளிப் பருவத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க- தீயாய்ப் பரவி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்தது.

இந்த நிலையில் இவருடைய நடிப்பில் தற்பொழுது 169 திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குகின்றார்.

அத்தோடு சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்று எற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

இதில், கையில் கோப்பையுடன் குரூப் நடுவில் நின்று கொண்டு மாஸாக போஸ் கொடுத்துள்ளார் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement