• Sep 19 2024

தளபதி விஜய் சொன்ன விடயத்தால் வியந்து போன டாக்டர் பட நடிகை ப்ரியங்கா -ஓ இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ப்ரியங்கா அருள் மோகன். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனால் தனது மார்க்கெட்டை அதிகரித்த ப்ரியங்கா வளர்ந்து வரும் கதாநாயகியாக மாறியுள்ளதோடு மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார், அப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பீஸ்ட் மற்றும் டான் பட ஷூட்டிங் அருகருகே நடந்திருந்தது, அப்போது இரண்டு படக்குழுவினர்களும் சந்தித்து கொண்டனர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இதனிடையே விஜய்யை சந்தித்தது குறித்து பேசியுள்ள பிரியங்கா மோகன், விஜய் சார் டாக்டர் படத்தில் எனது நடிப்பை பாராட்டினார். அதுமட்டுமின்றி தெலுங்கில் ஒரு பாடலை விஜய் பார்த்து பாராட்டியிருந்தார்.

சார் நீங்கள் அதெல்லாம் பாப்பீங்களா என கேட்டதற்கு நான் எல்லாமே பார்ப்பேன் என விஜய் சொன்னதாக பிரியங்கா பேட்டியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement