• Apr 30 2026

இணையத்தை அதிரவிடும் சதீஷின் புதிய அவதாரம்.! வெளியானது "முஸ்தபா முஸ்தபா" ரிலீஸ் தேதி

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் சதீஷ் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் தான் “முஸ்தபா முஸ்தபா”. இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் சரவணன். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், “முஸ்தபா முஸ்தபா” திரைப்படம் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்தப் படத்தை “தி மாபோகோஸ்” நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன். இந்தப் படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்துள்ளதுடன், அவருடன் இணைந்து நடிகைகள் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement