• Apr 30 2026

'டயங்கரம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் யூடியூப் உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள “VJ சித்து Vlogs” சேனல், இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். இந்த சேனல் மூலம் பிரபலமான விஜே சித்து தற்போது தனது கரியரில் மிகப்பெரிய அடுத்த கட்டத்தை எடுத்து வைத்துள்ளார். அதாவது, இயக்குநராகவும் கதாநாயகனாகவும் திரைத்துறையில் அறிமுகமாகிறார்.


சமூக வலைத்தளங்களில் தனது இயல்பான பேச்சு, நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த சித்து, தற்போது திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் இயக்கும் படத்தில் அவரே நடிப்பது ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

சித்துவின் இந்த முதல் படத்திற்கு “டயங்கரம்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பே வித்தியாசமாக இருப்பதால், படம் எந்த வகை கதை கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 


படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தில் பிரபல நடிகை நமிதா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement