தமிழ் சினிமாவில் காமெடியை மையமாகக் கொண்டு ஹீரோவாக தடம் பதித்துள்ள சந்தானம், தற்போது “DD Next Level” என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷன்கள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்த திரைப்படத்திற்கு எதிராக தலைப்புரிமை சார்ந்த வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் கூறப்பட்டிருப்பதின்படி, DD Next Level என்ற தலைப்பைப் பயன்படுத்தியது சட்டத்திற்கு முற்றிலும் முரணாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. “DD Next Level” திரைப்படம் நகைச்சுவையையும், அதிரடியையும் கலந்து கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு கூறியிருந்தது.
இந்த வழக்கை ஆர். கே. எண்டர்டெயின்மெண்ட் நிறுவன உரிமையாளர் ரமேஷ் குமார் என்பவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "தன்னுடைய படங்களின் தலைப்பை பயன்படுத்துவது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது." என்றார்.
வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், “DD Next Level” திரைப்படம் தற்போதைக்கு வெளியீட்டு திட்டத்திலேயே இருக்கிறது. ஆனால் இந்த வழக்கின் தீர்மானம், அந்த வெளியீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
Listen News!