இந்திய அரசியலில் எதிர்க்கட்சிகள் இருப்பதென்பது வழக்கமானது. வேறுபட்ட கருத்துக்களும், கொள்கைகளும், பல நேரங்களில் அரசியல் சூழ்நிலையில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. எனினும் அதனை தாண்டி, மனிதநேயமும் பாசமும் இருக்கின்றது என்பதை சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோர் நிரூபித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில், பல சினிமா பிரமுகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பாஜக மகளிரணி தலைவர் குஷ்பு சுந்தரும், திமுக மூத்த தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அரசியலில் பலகட்ட சவால்களை எதிர்கொண்டு வந்த பிரேமலதா விஜயகாந்தும் கலந்திருந்தனர்.
அந்த விழாவில் குஷ்பு சுந்தர் நடந்து வந்து பிரேமலதாவை பாசமுடன் கட்டியணைத்துப் பிடித்துள்ளார். அதன்போது “எப்படிமா இருக்க?” என்று கேட்ட அந்த ஒரு கேள்வி அங்கு இருந்தவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. மேலும் இவர்கள் இருவரும் வேறுபட்ட அரசியல் அடையாளங்களுடன் இருந்தாலும், அந்த அணைப்பு மனிதநேயம் நிறைந்தது என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Listen News!