சின்னத்திரை ரசிகர்களிடையே அதிகமான இடத்தைப் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி தான். வாரம் முழுவதும் ஒளிபரப்பாகும் தொடர்கள், வெறும் கதைகளாக இல்லாமல், மனநிலை, குடும்ப பாசங்களை அழுத்தமாகப் பேசும் நிகழ்வுகளாக மாறியுள்ளன.
இந்த வாரம் மட்டும் விஜய் டீவி தொடர்கள் அனைத்தும் பரபரப்பின் உச்சகட்டத்தில் இருக்கின்றன. ஒரு பக்கம் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, மகாநதி போன்ற தொடர்கள் விறுவிறுப்பான திருப்பங்களை கையாண்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், 'பொன்னி' தொடர் முடிவுக்கு வருகிறது என்ற செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட 'பொன்னி' தொடரானது, விஜய் டீவியில் குடும்ப பாசம் மற்றும் காதல் ஆகியவற்றை கலந்து வந்த தொடராக அமைந்திருந்தது. முதலில் மெதுவாக நடந்துகொண்ட இந்த தொடர், பின்னர் பல உணர்வு பூர்வமான திருப்பங்களால் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது 'பொன்னி' விரைவில் முடிவடையப் போகிறது என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சின்னத்திரை ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
Listen News!