தென்னிந்திய சினிமாவின் நடிகை சமந்தா தனது கடைசி படமான "குஷி" வெற்றிக்குப் பிறகு திரைத்துறையில் சிறிய இடைவெளி எடுத்திருந்தார். இந்த இடைவெளியின் போது அவரது உடல்நலம், தொழில் மற்றும் புதிய பட வாய்ப்புகள் எனப் பல விடயங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது, அவர் போட்டோஷூட், பட வாய்ப்புகள் மற்றும் வெப் சீரீஸ் எனப் பல விடயங்களில் பிஸியாக இருக்கிறார்.
மேலும் தனது புகைப்படங்கள் ஊடாக ரசிகர்களைத் தொடர்ந்தும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கின்றார். அந்த வகையில் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் ஊடாக சமந்தா தனது கியூட் லுக் மற்றும் ஸ்டைல் என்பவற்றில் எந்த மாற்றமும் இல்லாது இருப்பது தெரியவந்துள்ளது.
அதைப் பார்த்த ரசிகர்கள் "சமந்தா இவளவு அழகா இருக்காங்களே?" என்று கமெண்ட் மழை பொழிந்து வருகின்றனர். சினிமா மட்டுமல்ல, சமூக வலைதளத்திலும் பெரும் செல்வாக்கு கொண்ட சமந்தா எப்போதுமே ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பவர். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் "சமந்தா இன்னும் 25 வயது நடிகையை போலவே இருக்காங்க!" என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Listen News!