• Mar 16 2025

வில்வித்தைப் பயிற்சியாளருக்கு நிதியுதவி வழங்கிய நடிகர்...! யார் தெரியுமா?

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் ஸ்டாலின் திரையுலகைத்தைப் போலவே மனிதாபிமான செயல்கள் மற்றும் சமூக பொறுப்புணர்வு என்பவற்றின் மூலம் மக்கள் முன்னணியில் தன்னை நிரூபித்து வருகின்றார். இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்த செய்தி வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் உதயநிதி ஸ்டாலின் ட்ரெண்டாகி வருகின்றார். இச்செயலைப் பார்த்து  ரசிகர்கள் , வில்வித்தை பயிற்சியாளர்கள் மற்றும் திரைப்பட உலகத்திலிருந்து பலரும் நடிகர் ஸ்டாலினின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


வில்வித்தை பயிற்சியாளராக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஷிஹான் ஹுசைன், இந்திய அளவில் பல மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியிருக்கிறார். அவரது வழிகாட்டுதலில் பல விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட ஒரு உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வைத்தியர்கள் தொடர்ந்து பயிற்சி கொடுத்து வந்ததாலும் அவரது உடல் நிலையில் இன்னும் மாற்றம் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளனர்.


இந்த நிலையிலும், அவரது மருத்துவ செலவுகளுக்கு பெரியளவில் பணம் தேவைப்படுவதால் அவரின் குடும்பத்தினர் மற்றும் மாணவர்கள் உதவிகள் தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிர்ந்தனர். இந்த செய்தியை நடிகர் ஸ்டாலின் பார்த்தவுடன் உடனடியாக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி, தனது மனிதாபிமானத்தை நிரூபித்துள்ளார். இந்தச் செயலைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement