• Nov 22 2025

ஐபிஎல் அணியை வாங்கும் ஆசையா..? சல்மான் கான் சொன்ன அதிரடிக் கருத்து படுவைரல்..!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2008-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை இந்தியாவே உலகளாவிய அளவில் பெரும் ரசிகர்களை கவர்ந்திருக்கும் ஒரு பிரமாண்ட கிரிக்கெட் லீக் ஆக மாறியுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று வருகின்றன. 


2008 முதல் 2025 வரை 18 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிகள் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளன. அதன்பின், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) 3 முறையும் வெற்றியை பெற்றுள்ளன.


இந்நிலையில், இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற விடயம் ஒன்று வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஐபில் அணியை வாங்குவது குறித்து மனம் திறந்து கதைத்துள்ளார்.

அதன்போது சல்மான் கான், “ஐபிஎல் அணியை வாங்க எனக்கு இப்போது வயதாகிவிட்டது. 2008-ம் ஆண்டு IPL தொடக்கத்தில் அணியை வாங்க அழைப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் அதை ஏற்கவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார். இந்த தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement