சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகள் மீனாவுக்கு தெரியவருகிறது. அவர் உண்மையை வீட்டார்களிடம் மறைத்தாலும் முத்துவிடம் சொல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் மீனா ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணும் விதத்தில் நடந்துள்ளார். இது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில், ரோகிணி இத்தனை நாள் செய்த பிராடு வேலைக்கு வித்யாவும் உடந்தையாக இருக்கின்றார். இதனால் அவரை நாலு கேள்வி கேட்பதற்காக மகேஸ்வரி வீட்டிற்கு செல்லுகின்றார் மீனா.
அப்போது அங்கே ரோகிணியும் இருக்கின்றார். இதன் போது ரோகிணியை பார்த்து டென்ஷன் ஆன மீனா, ஒழுங்கு மரியாதையா வீட்டுல இருக்கிற எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லிடு என்று சொல்லுகின்றார்.

ஆனாலும் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் ரோகிணி, மனோஜ் க்ரிஷை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான் என்னால் சொல்ல முடியும் என்று கூறுகின்றார்.
இதனால் மனோஜ் ஒரு இடத்திலும் க்ரிஷ் ஒரு இடத்திலும் இருந்தால் எப்படி அவர்களுக்குள் நெருக்கம் வரும் என்று மீனா கேட்க, நாம் ஏற்கனவே க்ரிஷின் அம்மா துபாயில் இருப்பதாக தானே சொல்லி இருக்கின்றோம். அதனால் எப்படி அவரை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வர முடியும் என ரோகிணி சொல்லுகிறார்.
அவங்க கற்பனையில் உருவாக்கின அம்மா தானே. அந்த அம்மா இருந்தா என்ன? செத்தால் நமக்கென்ன? என மீனா கத்துகின்றார். இதைக் கேட்ட ரோகிணி நல்ல ஐடியா கொடுத்தீங்க என்று துபாயில் இருந்த க்ரிஷின் அம்மா இறந்து விட்டார் என்று புதுக்கதையை உருவாக்குகின்றார்.
அதன்படி ரோகிணியின் அம்மா அண்ணாமலையின் வீட்டிற்கு வந்து க்ரிஷின் அம்மா இறந்ததாகவும் அவனுக்கு இனிமேல் யாரும் இல்லை என கண்கலங்கியதோடு, க்ரிஷ் மீனா, முத்துவுடன் இருப்பதற்கு தான் ஆசைப்படுகின்றான் என்றும் சொல்லுகின்றார்.
இதை கேட்டதும் விஜயா கோபப்பட, அண்ணாமலை அவரை அடக்குகின்றார். க்ரிஷும் அண்ணாமலையை பார்த்து தாத்தா என கட்டிக் கொள்கிறார். இதுதான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ.
Listen News!